கனடாவில் அன்றாட செலவுகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கு குடியேறிவயர்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகளில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் அங்கு தற்காலிமாக குடியேறினர். ஆனால் அங்கு கிடைக்கும் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கினர்.
ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறி வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
கனடாவில் வீட்டு வாடகை பிரச்சினை, அன்றாட செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் சுமார் 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
2022ஆம் ஆண்டில் 93,818 பேரும், 2021ஆம் ஆண்டில் 85,927 பேரும் கனடாவில் இருந்து சொந்த நாடுகள் மற்றும் வேறு நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, பொருளாதாரத்தை உயர்த்த புலம்பெயர்ந்தவர்களைக் கனடா சார்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இருந்து அகதியாக கனடாவுக்கு வந்த பெண் ஒருவர் ,மேற்கத்திய நாட்டில் வசிப்பதால், அடித்தளத்தில் ஒரு அறையை மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும் என்பதை நான் ஒருபோதும் உணரவில்லை என்று தெரிவிக்கிறார்.
கிழக்கு டொராண்டோவில் உள்ள ஸ்கார்பரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரே ஒரு அறைக்கு 650 ($474) கனேடிய டாலர்களை வாடகையாக செலுத்துவதாகவும், இது அவரது மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீதம் என கூறுகிறார்.
கனடாவுக்கு செல்லும் பல அகதிகள் வீடுகள் கிடைக்காமல் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே ஏராளமானோர் கனடாவை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போல வருமா….