மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒன் பாரத் சாரி வாக்கத்தான் நிகழ்வை மும்பையில் தொடங்கி வைத்தார்.
கைத்தறித் துறை நமது நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது, இது அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. கைத்தறித் துறையில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பெண்களின் பங்கேற்பின் மூலம், புடவை கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தவும், இதன் மூலம் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக முன்நிறுத்தவும் ஒன் பாரத் சாரி வாக்கத்தான் நிகழ்வுக்கு கைத்தறி துறை ஏற்பாடு செய்திருந்தது.
இதனை மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், தர்ஷனா ஜர்தோஷ் மற்றும் மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இதில் முன்னணி தொழில் வல்லுநர்கள், பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள், விளையாட்டு பிரமுகர்கள், இல்லத்தரசிகள், உட்பட 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.