பாரதியார் சிறந்த தேசியவாதி, அவரது தமிழ் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாரதி விருது விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி,
பாரதியார், வஉசி உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை மேற்கொண்டனர். பாரதியார் உள்ளிட்டோரின் சுதந்திர போராட்டங்களால் இந்தியர்களின் எண்ணங்களை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டனர்.
பாரதியார் சிறந்த தேசியவாதி, அவரது தமிழ் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும். பாரதியாரால் சுதந்திர போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.
மகாகவிபாரதி பெண்களுக்கு அதிகாரமளித்தல், தமிழின் பெருமை உட்பட இந்திய மொழிகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியத்துக்கான அவரது சேவை குறித்து அதிக ஆய்வு தேவை என்று வலியுறுத்தினார்.