முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 
Jul 25, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 

Web Desk by Web Desk
Dec 11, 2023, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே திருப்பி தேனி, மதுரை மாவட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதன் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அணை கட்டப்பட்டது.

முல்லையாறும், பெரியாறும் சேரும் இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளதால் இதற்கு முல்லை பெரியாறு என்று பெயர் வந்தது. மதுரை, தேனி உள்பட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை முல்லை பெரியாறு அணை பூர்த்தி செய்து வருகிறது.

இந்த அணையை தமிழக பொதுப் பணித் துறையே பராமரித்து வருகிறது. கேரளா மற்றும் தமிழகம் இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்துகொண்டே உள்ளது.

தற்போது முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 2,000 கன அடி வரை தண்ணீர் வருகிறது.  அணையின் நீர்மட்டமும் 136 அடியாக உயர்ந்தது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்தால் கேரள பகுதிகளுக்கு முதல் எச்சரிக்கை விட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.

அதன்படி, கேரள பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண எச்சரிக்கை தானே தவிர வெள்ள எச்சரிக்கை கிடையாது. அணையின் நீர்மட்டம் 140 அடிக்கு மேல் சென்றால் மட்டுமே கேரள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தற்போது அணையின் நீர் மட்டம் உயர்வதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

 

Tags: KeralaTamil Naduwaterdammullaiperiyar136 feet
ShareTweetSendShare
Previous Post

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று!

Next Post

தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி மகாகவி, சுப்பிரமணிய பாரதியார்!

Related News

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies