ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் ஸ்ரீசுந்தர ஜோதிஜியின் இறுதி யாத்திரை இன்று, 11-ம் தேதி திங்கள் கிழமை நடைபெறுகிறது.
ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக்-ஆகத் திகழ்ந்தவர் ஸ்ரீசுந்தர ஜோதிஜி. இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தேசம் மற்றும் சமுதாய நலனுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வந்தார்.
இந்நிலையில்,ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் ஸ்ரீசுந்தர ஜோதிஜி காலமானார். அவரது பூத உடலானது சென்னை சேத்துப்பட்டு சக்தி காரியாயத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதி யாத்திரை இன்று மதியம் 3 மணிக்கு புறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சென்னை ஓட்டேரி மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு சுந்தரம் திருமதி உண்ணாமலை தம்பதிகளுக்கு பிறந்த ஒரே மகன் திரு சுந்தர ஜோதி 1955ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார். 19483ஆம் ஆண்டு சங்க தடையை எதிர்த்து சத்யகிரகம் செய்து சிறை சென்றுள்ளார்.
ஸ்ரீ ஜோதிஜி பிரச்சாரக் பயணத்தில் 1978ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகர் பிரச்சாரக் ஆக சேவை செய்த அவர் 1995 முதல் விஜயபாதம் ஆசிரியராக பணியை கவனித்து வந்தார்.
உடல் நிலை சரியில்லாத காரணத்தால் 2010 முதல் விஜயபாரதம் மேலாளராக இருந்தார். 2016 முதல் சென்னை சஹ கார்யாலய பிரமுக்காக இருந்தார். உடல் நிலை மோசம் அடைந்த பின் 2020 முதல் அவர் எவ்வித பொறுப்பும் இல்லாத பிரச்சாரக்காக கார்யாலயத்தில் இருந்தார்.