இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகிக்கும் அனில் சவுகான் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பணத்தின் நோக்கமாகும். இந்த பயணத்தின் போது, ஜெனரல் அனில் சௌஹான், ஜப்பானின் மூத்த ராணுவ தலைமையுடன் தொடர்பு கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை பார்வையிடுகிறார்.
இந்த ஆண்டு தூதரக உறவுகளின் 71வது ஆண்டைக் இந்தியாவும் ஜப்பானும் கொண்டாடுகின்றன. சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்த இரு நாடுகளின் அர்ப்பணிப்பை இந்த பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
















