கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா சாம்பியன்ஸ் பட்டம் வென்றனர்.
அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா மற்றும் சீனதைபே அணிகள் விளையாடின.
இந்தியா அணியின் சார்பாக தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா பங்குபெற்றனர். சீனதைபே அணியின் சார்பாக சுங் ஷுயோ யுன் மற்றும் யூ சியென் ஹுய்யை பங்குபெற்றனர்.
மொத்தம் 40 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 21-13, 21-19 என்ற கணக்கில் சீனதைபே அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய வீராங்கனைகளான தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா தங்களது 2 வது சூப்பர் 100 பட்டத்தை உறுதி செய்தனர்.
இது இவர்களுக்கு இந்த ஆண்டின் 3வது பட்டம் ஆகும். முன்னதாக இந்த ஆண்டில் அபு தாபி மாஸ்டர்ஸ் மற்றும் நான்டெஸ் இண்டர்நேஷ்னல் சேலஞ் பட்டத்தை வென்றனர்.
அஷ்வினி – தனிஷா ஜோடி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் சேர்ந்து விளையாடத் தொடங்கினர். மேலும், அக்டோபர் – செப்டம்பர் மாதங்களில் சீனாவில் நடைபெற்ற இந்தியன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பகுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.