2023 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்கள் குறித்து பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் அனில் சர்மாஇயக்கத்தில் அம்ரிஷ் பூரி நடிப்பில் வெளிவந்த காதர் 2 திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் அமெரிக்கா படமான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஓபன்ஹெய்மர் படம் உள்ளது.
நான்காவது இடத்தில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளன ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த அதிபுர்ஷ் திரைப்படம் உள்ளது. ஐந்தாவது இடத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் உள்ளது. ஆறாவது இடத்தில் ‘ தி கேரளா ஸ்டோரி ‘ உள்ளது.
ஏழாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமான ஜெயிலர் உள்ளது. அதாவது இடத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் சமீபத்தில் வெளிவந்த டைகர் 3 திரைப்படம் உள்ளது.
பத்தாவது இடத்தில் தமிழ் திரைப்படமான வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் உள்ளது. இதில் மொத்தமாக 3 தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளது. அதில் 2 விஜய் நடித்த திரைப்படங்கள். மேலும் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜவான் திரைப்படம் தமிழ் இயக்குநரின் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.