சமஸ்கிருத ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தற்காக பி.என். பரசுராமனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியார் 142வது பிறந்தா நாள் மற்றும் பாரதிய மொழிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் போது சொல்லின் செல்வர் பி.என் பரசுராமனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சமஸ்கிருத ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தற்காக பி.என் பரசுராமனுக்கு தமிழக ஆளுநர் விருது வழங்கி சிறப்பித்தார்.
பிறநாட்டு அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட பரசுராமனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.