ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர்களின் கருத்துக்களால் மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர் அப்துல்லா பங்கேற்று பேசினார்.
அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அந்தஸ்து (370வது பிரிவு) ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று அவர் கூறினார். 2019 சட்டம் (திருத்தங்கள்) அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறிய அவர், பெரியாரின் வரிகளை மேற்கோள் காட்டினார், ஒவ்வொரு இனத்துக்கும் தனது அரசை முடிவு செய்ய உரிமை உள்ளது எனவும் காஷ்மீர் மாநிலத்துக்கும் தனது அரசை தேர்ந்தெடுக்க அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், இது “இந்திய அன்னையின் ஆன்மா மீதான தாக்குதல்” என்று கூறினார். உங்கள் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
நீங்கள் மேடையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, நீங்கள் வெகுதூரம் சென்றுவிட்டீர்கள். உங்கள் கருத்துக்களை நீக்குகிறேன். இனப் பாகுபாட்டைக் குறிப்பிடுகிறீர்கள். மன்னிக்கவும் அது நீக்கப்பட்டது என தெரிவித்தார்.
உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்க முடியாது என்று தங்கர் கூறினார்
இதனிடையே அப்துல்லா தனது கருத்துக்களை தலைவர் தவறாக புரிந்து கொண்டார் என்று கூறினார். திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உறுப்பினரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தலைவருக்கு நீக்க உரிமை உள்ளது என்று கூறினார்.