புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு!
Oct 11, 2025, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு!

நாடாளுமன்றத்தில் இன்று மசோதா அறிமுகம்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதா தோல்வியடைந்தது.

இதன் பிறகு, 1998-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும், தொடர்ந்து 1999, 2002, 2003 என பல்வேறு கட்டங்களிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் இம்மசோதா தோல்வியடைந்தது.

இதையடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர முடிவு செய்தது. அதன்படி, இம்மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை செய்த பின்னரே இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில்தான், முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த, மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான 2 மசோதாக்களை இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags: Parliamentjammu kashmirWoman reservationPondichery
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் முன்பு பாஜக ஆர்பாட்டம்! – அண்ணாமலை

Next Post

நீலகிரி மலை இரயில் சேவை ரத்து!

Related News

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

அமெரிக்கா ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் மாயம்!

புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அக்டோபர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சீர்காழி அருகே நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

2026-27 கல்வியாண்டு முதல் பள்ளி பாடங்களில் AI அறிமுகம் – மத்திய அரசு முடிவு!

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies