உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை இரயில் சேவை டிசம்பர் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஊட்டி மலை இரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்தன. இதனை அடுத்து, சீரமைப்பு பணிகளுக்காக உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை இரயில் சேவை டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 13-ஆம் தேதி வரை மலை இரயில் சேவை ரத்து செய்யப்படுள்ளது.
மழை காரணமாக, இரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை இரயில் சேவை ரத்துப்படுவதாக சேலம் இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.