பெரியார் குறித்த தி.மு.க. எம்.பி. பேச்சு: அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்!
Aug 20, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியார் குறித்த தி.மு.க. எம்.பி. பேச்சு: அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரியார் கூற்றை உதாரணம் காட்டி தி.மு.க. எம்.பி. அப்துல்லா பேசியதற்கு, பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும். அதேபோல, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததிலும் தவறு இல்லை. அதேசமயம், 2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

இத்தீர்ப்பு பா.ஜ.க.வினரால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தொகுதிகளை அதிகரிப்பது, எஸ்.சி., எஸ்.டி. பிரதிநிதித்துவம் உள்ளிட்ட திருத்தங்களுடன் ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய தி.மு.க. எம்.பி. அப்துல்லா, ​​நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதோடு, ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என்று பெரியார் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதில், பெரியாரின் கருத்தை ஏற்க முடியாது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். மேலும், தி.மு.க. எம்.பி. அப்துல்லா பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்துல்லா பேச்சை தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தி.மு.க. உறுப்பினர் அப்துல்லாவின் பேச்சு அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டுமா? என்பதை அவைத் தலைவர் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று வர்ணித்த தி.மு.க. உறுப்பினரின் கருத்தை ஏற்க முடியாது. இனத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது அரசியலமைப்பின் சாரத்துக்கு எதிரானது.

நாடாளுமன்ற அவையில் கருத்துச் சுதந்திரம் என்னும் உரிமையால் தேசத் துரோகக் கருத்தைக்கூட மேற்கோள் காட்ட முடியுமா என்ன? தி.மு.க. உறுப்பினர் அப்துல்லாவின் கருத்து நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. இதை ஏற்க முடியாது. இந்தக் கருத்து, பேச்சு சுதந்திரத்துக்குத் தகுதியற்றது.

இதுபோன்ற பிரச்சனையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? நாம் அனைவரும் அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறோம். இது பேச்சு சுதந்திரம் அல்ல. ஓர் உறுப்பினரின் இத்தகைய தவறான செயல்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களால் இதை ஏற்க முடியாது. எனவே, அந்தப் பகுதிகளை நான் நீக்குகிறேன்” என்றார். தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், தி.மு.க. எம்.பி. அப்துல்லாவின் கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

Tags: ParliamentDMKMP Abdullah
ShareTweetSendShare
Previous Post

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி – எப்படி நடக்கிறது தெரியுமா?

Next Post

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் நாளை பதவியேற்பு!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies