ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் தற்பொழுது நடித்துவரும் தனது 170வது திரைப்படத்தின் அப்டேடை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா, மஞ்சு வாரியர், ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.
பேட்ட, தர்பார், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அனிருத் நான்காவது முறையாக ரஜினிக்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மூழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படத்திற்கு ”வேட்டையன்” என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.
ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்ட டைட்டில் டீசரில் ரஜினி போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது.
கையில் லத்தியுடன் வரும் ரஜினி, ஸ்டைலாக கூலிங் கிளாஸை கையில் வைத்திருக்கும் ரஜினி, “குறி வச்சா இரை விழணும்” என பேசுகிறார்.
இதன் மூலம் ஜெயிலர் படத்தை போன்று வேட்டையன் படத்தில் மாஸ் ஆக்ஷன் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.