ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா குரூப் ‘சி’யில் இடம் பெற்றுள்ளது.
இந்த குரூப்பில் இந்தியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு முன்னேறும். இதில் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியின் காலிறுதி சுற்றில் இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் விளையாடியது. பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பின்னர் இந்த அணி தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி 4-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்குத் இந்திய அணி தகுதி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் ஆதித்திய அர்ஜுன் 34வது நிமிடத்திலும் அவரைத் தொடர்ந்து அரைஜித் சிங் 35வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பின்னர் ஆனந் குஷ்வாஹா 52வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து உத்தம் சிங் 57வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
நெதர்லாந்து அணியின் சார்பில் டிமோ 5வது நிமிடத்திலும், பேபிஞ் வேன் டீர் 16வது நிமிடத்திலும்,
ஒலிவியர் 44வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
காலிறுதியில் வெற்றி பெற்ற இந்தியா வரும் 14 ஆம் தேதி அரையிறுதியில் ஜெர்மனியுடன் விளையாடவுள்ளது.