இப்போது தமிழகத்தின் விடிவுகாலம் துவங்கிவிட்டது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
”மக்களுக்காக” என்னும் மனநிலை கடுகளவும் இல்லாமல், ஆனால் அது இருப்பதுபோல ஒரு போலி முகத்தை மீடியாவை பயன்படுத்தி மக்களிடம் காட்டி, ஊழல் பணத்தையும் கொடுத்து மீண்டும் வாக்குகளை அள்ளுவது திமுகவின் அரசியல் தொழில்!
இந்த தொழிலில் வேகம் காட்டுகையில் பல கொலைகளையும் பகல் கொள்ளைகளையும் செய்வார்கள்! எதற்கும் வெட்கப்படமாட்டார்கள், கூச்சப்பட மாட்டார்கள் திமுகவினர்! இந்த வகையில் கருணாநிதிகுடும்பம் 50 ஆண்டுகளில் சேர்த்த ஊழல் சொத்து ஏறத்தாள 100 லட்சம் கோடியை தாண்டும் என சமூக ஆர்வலர்கள் கணக்கிடுகிறார்கள்!
ஆனால், கொடிபிடிக்கும் திமுக தொண்டனுக்கு இந்த உண்மை தெரியாது! தொண்டனுக்கும் பொதுமக்களுக்கும் தெரியாதவகையில் பத்திரிக்கைகளையும் தொலைக்காட்சிகளையும் விலைகொடுத்து வாங்கி, அதில் பொய் செய்திகளையும், திசை திருப்பும் அறிக்கைகளையும் பரப்பி வருவார்கள்! தேவைப்பட்டால், சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் அதே பொய்ச் செய்தியையும் திசை திருப்பும் அறிக்கைகளையும் அவர்களின் வாயாலேயே சொல்ல வைப்பார்கள்!
ஊழல் பணத்தை இவர்கள் சினிமா மற்றும் ரியலெஸ்டேட் தொழில்கள் மூலமாக வெள்ளைப்பணமாக மாற்றி வருவதால், சினிமா தொழிலில் இருக்கும் நடிகர்கள் இவர்களின் நிர்ப்பந்தத்தை புறந்தள்ள மாட்டார்கள்!
திமுக தொண்டனும் பொதுமக்களும் சினிமா நடிகர்களை திரையில் மட்டும் பார்த்து வருவதால், கதாசிரியர்களின் கற்பனைப்படி கதாநாயக நடிகர்கள் நல்லவர்களாகவே கருதப்படுகிறார்கள்! அதே வேளையில் வில்லன் நடிகர்களை திமுக பயன்படுத்தாது!
வரிப்பணம், மத்திய அரசுதரும் நிதி, கடன் வாங்கும் நிதி இப்படியாக மொத்தம் வருடத்தில் 3 லட்சம் கோடியை இந்த மாநில நிர்வாகம் கையாளுவதாக எடுத்துக்கொண்டால், அதில் ஒரு லட்சம் கோடியை இவர்களின் குடும்ப சொத்தாக மாற்றிவிடுவார்கள்! இதை தவிர்த்து, சொத்து பதிவு, வாகன பதிவு, வேலைவாய்ப்பு, இடமாற்றம், வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை, கிரானட் கொள்ளை இப்படியாக மாதம் ஏறத்தாள ஒரு லட்சம் கோடி இந்த குடும்பத்திற்கு வந்துவிடும்! சாராய ஆலையில் மாதம் ஒரு லட்சம் கோடி!
தலைமைக்குடும்பத்திற்கு இவ்வளவு என்றால் ஏறத்தாள 100 திவான்கள் திமுகவில் இருக்கிறார்கள்! அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது! அங்கேயும் ஒரு ஊழல் கணக்கு இருக்கிறது! நூற்றுக்கணக்கில் திவான்கள் என்றால் ஆயிரக்கணக்கில் கணக்குப்பிள்ளைகளும் ஒப்பந்தக்காரர்களும் திமுகவில் இருக்கிறார்கள்! மொத்தத்தில் தமிழகம் என்னும் உடல் முழுமையும் பரவியிருக்கும் புற்றுநோய்தான் திமுகவின் ஊழல் என்பது!
“காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!” என்னும் கண்ணதாசனின் பாடல்வரிகள் பலிதமாகும் நாள்கள் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது! திமுகவினர் தங்களின் ஊழலை மறைக்கும் திரையாகவும், மக்களை தங்களிடம் இழுக்கும் வலையாகவும் பயன்படுத்தி வந்தார்களே பத்திரிக்கைகளையும் ஊடகங்களையும்-, அந்த பத்திரிக்கை ஊடகத்துறையில் ஓட்டையை போட்டுவிட்டது சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களால் திமுகவின் சாயம் வெளுக்கத்துவங்கியுள்ளது!
”4000 கோடி என்னாயிற்று?” ” 98 சதவிகிதம், 95 சதவிகிதம், 99 சதவிகிதம் என சொல்லி நம்ப வைத்து கழுத்தறுத்தது ஏன்?” ”2015 மழையை விட 2023 மழை குறைவுதானே!” “கமலஹாசன் 2015 ல் என்ன சொன்னார் இப்போது என்ன சொல்கிறார்?” “நடிகர்கள் யாரும் ஏன் உதவவில்லை?” “பாதிரிகள் ஏன் வரவில்லை?”
“சன் டிவி பெரிய கார்பரேட் நிருவனம்தானே, ஜி ஸ்கொயர் பெரிய நிறுவனம்தானே, ”ரெட்ஜெயின்” சினிமா நிறுவனம் 1000 கோடியில் படம் எடுக்கும்போது ஓரிரு கோடியை வெள்ள நிவாரணமாக ஏன் செலவு செய்யவில்லை?” “ சென்னை மழைவெள்ள தடுப்பு கட்டுமானங்களுக்காக 2015 ல் மத்திய அரசு தந்த 4397 கோடிக்கான செலவீனங்கள் என்ன?” ”அந்த தொகை செலவு செய்யப்பட்டிருந்தால் இப்போது வெள்ளம் தேங்கியிருக்காதே?” “ கொடுத்த பணத்தை எங்கே வைத்துள்ளீர்கள்? அதை எடுத்து வாருங்கள், அதை விடுத்து மீண்டும் மத்திய அரசிடம் ஏன் கேட்கிறீர்கள்?” “ மத்திய ஆரசு இப்போது கொடுத்த 450 கோடியிலும் 561.29 கோடியிலும் ரூபாய் 6000 தருவதாக சொல்லாமல், நாங்கள் தருகிறோம் என்று எதற்காக பொய் சொல்கிறீர்கள்?” ” ”மாநில அரசு நிதியில் இருந்து எவ்வளவு தொகை நிவாரணமாக தரப்படும்?” “வங்கிக்கணக்கில் தராமல் எதற்காக ரேசன் கடைகளில் தருகிறீர்கள்?” “ ஒரு லட்சம் போலி ரேசன் கார்டுகளுக்கு தரப்பட்டதாக கணக்கு எழுதுவீர்களா?” இப்படியெல்லாம் பற்பல கேள்விகளை மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக எழுப்பி வருகிறார்கள்! சமூக ஊடகம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நியாயமான கேள்விகள் எழுந்திருக்காது!
ஜி.எஸ்.டி உன்னும் வரியில் பாதி தொகை வசூலிக்கப்படும் போதே மாநில அரசுக்கு வந்துவிடுகிறது! மீதம் பாதியில் 41 சதவிகிதத்தை பின்னர் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிறது என்னும் உண்மைக்கூட தெரியாத, உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு கிடையாது என்னும் உண்மை தெரியாத, நீட் தேர்வை யாராலும் தடுக்க முடியாது என்னும் உண்மை தெரியாத, அறிவில்லாத அரசியல்வாதிகள் வலம் வரும் தமிழகத்தில், மெத்த படித்த இளைஞன், 9 ஆண்டுகாலம் அரசுபணியில் நேர்மையையும் சாதனையையும் நிரூபித்துக்காட்டிய இளைஞன், தமிழக வரலாறு அறிந்த, இந்திய வரலாறு தெரிந்த, உலக அரசியலை உனர்ந்த ”அரசியல் மேதை” பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் உண்மையை பேசும் அரசியல் திமுகவின் சாயத்தை மேலும் வெளுக்கச்செய்துவிட்டது!
மொத்தத்தில் இப்போது தமிழகத்தின் விடிவுகாலம் துவங்கிவிட்டது! இனி தமிழகத்தில் திமுகவின் ஊழல் இருள் மறையும் பாஜகவின் நேர்மை ஒளி பிறக்கும்! எனத் தெரிவித்துள்ளார்.