விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறவுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 133 வது போட்டி அதாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த அரையிறுதி போட்டியில் தமிழகம் மற்றும் அரியானா அணிகள் இன்று விளையாடவுள்ளது. இப்போட்டியானது ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறவுள்ளது.
அதேபோல் நாளை நடைபெறவுள்ள இரண்டாம் அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடவுள்ளன.