கேரளாவில் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதோடு, ஆளுநரை தாக்கவும் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார். முன்னதாக, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் மழை வரும் போல் தெரிகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் போன்று மீண்டும் ஏற்படும் முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில், அறநிலைத்துறை ஊழியர்கள் பக்தர்களைத் தாக்கியது கண்டனத்திற்கு உரியது. அறநிலையத்துறை அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார், ஆனால், கோவிலில்,எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் தரைக்குறைவாக நடத்துவது, அடிப்பது வன்மையான கண்டன த்திற்குரியது. அதுவும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் போகும் இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு தமிழக அரசு முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் 370 – சட்ட விவகாரத்தில் , உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கதக்கது, ஜம்மு காஷ்மீர், பாரதத்துடன் இணைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
பெரியார் பற்றிப் பேசுவது, பெண் உரிமை பேசும் முதல்வர் முக ஸ்டாலின் பழங்குடி பெண் ஜனாதிபதி ஆக ஒட்டுப்போட மறுத்தார். இதை அவருக்கு யார் சொல்லி புரியவைப்பது எனத் தெரியவில்லை.
கேரளா ஆளுநர் தாக்கபட்டு இருப்பதும், பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளதும் வருத்தம் அளிக்கிறது. வேறு பிரச்சினை ஏதாவது என்றால் குமரி முதல் காஷ்மீர் வரை போராட்டம் நடத்தும் நபர்கள் ஏன் கேரளா ஆளுநர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றார்.
Comments