மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரிட்டிஷ் இந்திய வம்சாவளியான டேட்டா விஞ்ஞானி ஸ்மிடல் டேக், பர்மிங்காம் நடந்த 2023 ரயில் பணியாளர் விருதுகளில் இந்த ஆண்டின் ‘புதியவர்’ பிரிவில் விருதை வென்றார்.
இங்கிலாந்தில் 2007 ஆம் ரயில் பணியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது. இது ரயில் துறையில் உள்ள பணியாளர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரிட்டிஷ் இந்திய வம்சாவளியான டேட்டா விஞ்ஞானி ஸ்மிடல் டேக், பர்மிங்காம் நடந்த 2023 ரயில் பணியாளர் விருதுகளில் இந்த ஆண்டின் ‘புதியவர்’ பிரிவில் விருது வழங்கப்பட்டது.
மொபிலிட்டி நிறுவனமான அல்ஸ்டாமில் ( Alstom ) ஒரே டேட்டா விஞ்ஞானியான ஸ்மிடல் டேக், ஜல்கானில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தில் உள்ள வாட்ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் பயின்றார், அதைத் தொடர்ந்து லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பல்கலைக்கழகம் பயின்றார்.
26 வயதான இவர், அல்ஸ்டாமில் ஒரே டேட்டா விஞ்ஞானியாக முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் தனது தாத்தா, பாட்டியின் அறிவுரையால், தனது திறமைகளை மேம்படுத்தி கடினமாக உழைத்ததாகவும், பொறியியல் தொழில்நுட்பங்களை வளர்ப்பதே தனது லட்சியம் என்றும் கூறினார்.
கடந்த மாதம் நடந்த விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு, அல்ஸ்டாமில் டிசைன் குரூப் மேலாளர் மிஃபாஸ் மிஃப்தா கூறுகையில், “ஸ்மிட்டல் எந்த ஒரு விஷயத்தையும் வேகமாகக் கற்றுக்கொள்பவர். தனது வேலையை மட்டும் இல்லாமல் மற்ற வேலைகளையும் செய்பவர். அவர் எப்போதும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளைத் தேடிக்கொண்டே இருப்பார் ” என்று கூறினார்.
















