தமிழகத்தில் ”சமூகநீதி” என்னும் சொல்லை ஊழலில் பெயர்பெற்ற திமுகவினர் அடிக்கடி சொல்லுவார்கள்! நாங்கள் சமூக நீதி காவலர்கள் என்பார்கள்! நாங்கள் சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்பார்கள்! ஆனால், சமூக நீதி என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. ஒரு முறையேனும் அவர்கள் சமூகநீதியின் விளக்கத்தை மேடைகளிலோ, பேட்டிகளின்போதோ சொன்னது இல்லை! திமுகவை பொறுத்தமட்டில் அவர்கள் எதை செய்தாலும் ”இதுதான் சமூகநீதி” என சொல்லுவார்கள்! திமுகவினர் மத்தியில் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ”ஊழல் செய்வதுதான் சமூக நீதி” என்று!
சமூக நீதி என்பது சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒரே நீதியை வழங்குவதுதான்! ”எல்லோரும் ஓர் எடை! எல்லோரும் ஓர் நிறை! எல்லோரும் இன்னாட்டு மன்னர்!- என்று சமூக நீதிக்கு விளக்கம் சொன்னார் சுப்பிரமணிய பாரதியார்!
ஒரு முறை ஒரு நிரூபர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து “ நீங்கள் முஸ்லீம்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்?”- என்று கேட்டார்! அதற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை என்றார்! உடனே நிரூபர் “ சரி, நீங்கள் கிருஷ்தவர்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்றார்! அதற்கும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், நான் கிருஸ்தவர்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை என்றார்! உடனே அந்த நிரூபர் “சமூக நீதியை கொலை செய்துவிட்டார் பிரதமர் நரேந்திரமோடி” என தலைப்பிட்டு அந்த பேட்டியை பத்திரிக்கையில் வெளியிட முற்பட்டார்! அந்த நிரூபரை அழைத்த பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், “நான் ஹிந்துக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை! 130 கோடி இந்தியர்களுக்காகத்தான் சேவை செய்து வருகிறேன்” என்றார்!
ஜாதிமத பேதமில்லாமல், வீடற்றவர்கள் அனைவருக்கும் வீடு! வீட்டில் கழிப்பிடம் இல்லாதோர் அனைவருக்குமே கழிப்பிடம் கட்ட நிதி உதவி! அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பு! அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 5 லட்சம் வரை வருத்துவ செலவுக்காக நிதி உதவி! 2023 டிசம்பர் 31 ல் முடிவடையும் ஒன்றரை வருட காலத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசாங்க வேலை! அனைத்து கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் மின்சார வசதி! அனைவருக்குமே முத்ரா வங்கி, ஸ்டார்டப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, விஸ்வகர்மா என தொழில் செய்ய வியாபாரம் செய்ய நிதி வசதிகள்! கல்விக்கடன், சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்கடன், விவசாயிகளுக்கு மரியாதை தொகை வருடம் ரூ.6000- என பாகுபடில்லாமல் எல்லோருக்கும் உதவிவரும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசும், பிரதமர் நரேந்திரமோடி அவர்களுமே சமூக நீதி காவலர்கள்!
எங்கள் குடும்பத்தில்தான் முதலமைச்சர், எங்கள் குடும்பத்தில் ஏதும் தெரியாத சிறுவனாக இருந்தாலும் அமைச்சர் பதவி உண்டு, துணை முதலமைச்சரும் நாங்களே, மத்திய அமைச்சரும் மேயரும்கூட எங்கள் குடும்பமே! ஊரெல்லாம் பதவி கிடைத்தாலும், அதையும் எங்களின் குடும்ப கொத்தடிமைகளுக்கு மட்டும் தந்து அவர்கள் எங்களின் கண்காணிப்பில் இயங்குமாறு பார்த்துக்கொள்வோம், என்னும் நிலையில் செயல்பட்டு வரும் இவர்களின் கட்சி சமூக நீதி கட்சியாம்! இது சமூக நீதியல்ல ”ஊரை அடித்து உலையில் போடும் மோசமான குடும்ப நீதி!”
முன்னால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு பட்டியலினத்தவர்! அவருக்கும் முந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் சிறுபான்மை சமூகத்தவர், இப்போதைய ஜனாதிபதி திரவ்பதி முர்மு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர்! இந்த மூவருமே பாரதிய ஜனதா கட்சியின் சமூகநீதி தேர்வு! ராம்நாத் கோவிந்த் அவர்களும் திரவ்பதி முர்மு அவர்களும் பிராதமர் நரேந்திர கோடியால் அறிமுகப்படுத்தப் பட்டவர்கள்!
இன்று, 2023 டிசம்பரில் சதீஸ்கரில் தேர்வாகியுள்ள பாஜக முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அவர்கள் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்! சதீஸ்கர் மட்டுமல்ல ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என அனைத்து பாஜகவின் புதிய அரசுகளும் புதிய இளைய தலைமுறையினரால் தலைமை தாங்கப்பட்டு வருகிறது!
பழங்குடியினர், பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிர்ப்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர்,முற்படுத்தப்பட்டோர் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் வழங்கும் வகையில், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சதீஸ்கர் ஆகிய சட்டசபைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி மந்திரி சபையை அமைத்துள்ளது!
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகார பகிர்விலும் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுகிறது! இந்தியாவில் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளிலும், தமிழகத்தில் திமுகவிலும் குடும்ப நீதிதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது! ஒரு குடும்பத்திற்கு போக மீதி இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு என்பதுதான் திமுக காங்கிரசின் நிலைப்பாடாக உள்ளது! ஆனால் இவர்கள் சமூக நீதியைப்பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்!
காங்கிரஸ் கட்சி அவர்களின் ஆட்சி நடக்கும் ஏதாவதொரு மாநிலத்தில், ஒரு பட்டியலினத்தவரை முதலமைச்சராக அமர்த்துமா? திமுகவில் ஒரு பட்டியலினத்தவர் முதலமைச்சராக ஆக்கவேண்டாம், துணை முதலமைச்சராக நியமிப்பார்களா? அல்லது குறைந்த பட்சம் அவர்களின் குடும்பத்தில் இருந்து வராத ஒருவரை துணை முதல்வராக அறிவிப்பார்களா? சமூக நீதி என்னும் சொல்லை உச்சரிக்கும் தகுதி திமுகவினருக்கு எள்ளளவும் இல்லை!
உண்மையான சமூக நீதி கட்சி பாரதிய ஜனதா கட்சியே! உண்மையான சமூகநீதி காவலர் பிரதமர் நரேந்திரமோடி அவர்களே!