கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் 825 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கோவிட் தொற்றறால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென உயரத்தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில் 479 பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 825 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் 90% க்கும் அதிகமான பேர் கேராளவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சுவாச அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு H1N1 தொற்று இல்லாத நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது பரிசோதனையில் உறுதிசெய்யப்படுகிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான நோயாளிகளில் தொற்று மிகக் கடுமையாக இல்லாததாலும், கோவிட் காரணமாக இறப்பு மிகக் குறைவு என்பதாலும் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர், புதுச்சேரியை தொடர்ந்து தற்போது கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.