நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பேர் சஸ்பெண்ட்!
Oct 4, 2025, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பேர் சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, பணியாளர்கள் 8 பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று முற்பகல் நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் அரங்கத்தில் இருந்த 2 பேர் திடீரென, மக்களவைக்குள் குதித்தனர்.

இருவரும் சர்வாதிகாரம் கூடாது என்று கத்தியபடியே, அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி ஓடினர். இருவரையும் மக்களவையில் இருந்த எம்.பி.க்கள் திரண்டு பிடித்தனர். அப்போது, இருவரும் கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசினர். இதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியது. இதனால், அவையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து, பிடிபட்ட இருவரும் அவைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா என்பதும், மற்றொருவர் கா்நாடகாவின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் என்பதும் தெரியவந்தது.

அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று கோஷமிட்டவாறு மஞ்சள் நிற புகைக் குண்டுகளை வீசிய ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அந்த ஆண் மகாராஷ்டிராவைச் சோ்ந்த அமோல் ஷிண்டே என்பதும், அப்பெண் ஹரியானாவைச் சோ்ந்த நீலம் தேவி என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த இந்த அத்துமீறலுக்கு பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என்பதால், பணியாளர்கள் ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய 8 பேரை மக்களவை செயலகம் இன்று சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

Tags: Parliamentsuspendsecurity breach8 personnel
ShareTweetSendShare
Previous Post

ரூ. 31 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி!

Next Post

மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் பலி!

Related News

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies