அயோத்தி இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவுவடிவமைப்பு பணிளை தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இராமர் கோவிலில் சுமார் 44 கதவுகளை வடிமைக்கும் பணியில் மாமல்லபுரத்தை சேர்ந்த 20 தச்சசர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக குமாரசாமி ரமேஷ் தலைமையிலான 20 தச்சர்கள் கடந்த 6 மாதங்களாக அயோத்தியில் தங்கி பணி செய்து வருகின்றனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைபொதுச் செயலாளர் சம்பத் ராய் உட்பட, இரண்டு மூத்த விஎச்பி தலைவர்களை ரமேஷ் டெல்லியில் சந்தித்துள்ளார்.
அப்போது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன கோவில் அசைன்மெண்ட் அவருக்கு வழங்கப்பட்டது. அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். ஒரு ஆண்டு கழித்து இராமர் கோவில் கதவு வடிவமைப்பு பணிக்கான ஆர்டர் அவருக்கு கிடைத்தது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி அயோத்தி இராமர் கோவிலில் பணியை தொடங்கியதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை எனவும், அடையாள அட்டைகள் தவிர, கருவிழி ஸ்கேனர் மூலம் பாதுகாப்பு சோதனை நடைபெறும் என அவர் கூறினார். இதனால் சில காலதாமதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோடையில் கடும் வெப்பம், குளிர்காலத்தில் வாட்டி வதைக்கும் குளிர் என கடும் சவால்களுக்கு இடையே பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.,
ஜூன் மாதம், ரமேஷின் குழுவினர் டெல்லியில் ஒரு இயந்திர கண்காட்சிக்கு சென்று, 10 லட்சம் மதிப்புள்ள கருவிகளை எடுத்துக்கொண்டு அயோத்திக்குச் சென்றனர்.
மகாராஷ்டிராவின் வன மேம்பாட்டுக் கழகம் வழங்கிய டன் பல்ஹார்ஷா தேக்கு மரங்களைக் கொண்டு, கோயிலின் தலைமை ஸ்தபதி வழங்கிய வடிவமைப்பின் அடிப்படையில் வேசரா பாணியில் கதவுகளை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினர்.
கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட 44 கதவுகள், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் பலரின் சன்னதிக்கான கதவுகள் ரமேஷின் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது. கருவறையில் யானை, பெண்கள், தாமரைகள், மயில் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் பொறிக்கப்பட்ட கதவுகள் இருக்கும். டெல்லி பொற்கொல்லர்கள் தற்போது 44 கதவுகளிலும் தங்க முலாம் பூசு வருகின்றனர்.