இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவுவடிவமைப்பு பணிளை தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இராமர் கோவிலில் சுமார் 44 கதவுகளை வடிமைக்கும் பணியில் மாமல்லபுரத்தை சேர்ந்த 20 தச்சசர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக குமாரசாமி ரமேஷ் தலைமையிலான 20 தச்சர்கள் கடந்த 6 மாதங்களாக அயோத்தியில் தங்கி பணி செய்து வருகின்றனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைபொதுச் செயலாளர் சம்பத் ராய் உட்பட, இரண்டு மூத்த விஎச்பி தலைவர்களை ரமேஷ் டெல்லியில் சந்தித்துள்ளார்.

அப்போது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன கோவில் அசைன்மெண்ட் அவருக்கு வழங்கப்பட்டது. அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.  ஒரு ஆண்டு கழித்து இராமர் கோவில் கதவு வடிவமைப்பு பணிக்கான ஆர்டர் அவருக்கு கிடைத்தது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி அயோத்தி இராமர் கோவிலில் பணியை தொடங்கியதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை எனவும், அடையாள அட்டைகள் தவிர,  கருவிழி ஸ்கேனர் மூலம் பாதுகாப்பு சோதனை நடைபெறும் என அவர் கூறினார். இதனால் சில காலதாமதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோடையில் கடும் வெப்பம், குளிர்காலத்தில் வாட்டி வதைக்கும் குளிர் என கடும் சவால்களுக்கு இடையே பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.,
ஜூன் மாதம், ரமேஷின் குழுவினர் டெல்லியில் ஒரு இயந்திர கண்காட்சிக்கு சென்று, 10 லட்சம் மதிப்புள்ள கருவிகளை எடுத்துக்கொண்டு அயோத்திக்குச் சென்றனர்.

மகாராஷ்டிராவின் வன மேம்பாட்டுக் கழகம் வழங்கிய டன் பல்ஹார்ஷா தேக்கு மரங்களைக் கொண்டு, கோயிலின் தலைமை ஸ்தபதி வழங்கிய வடிவமைப்பின் அடிப்படையில் வேசரா பாணியில் கதவுகளை வடிவமைக்கும் பணியைத் தொடங்கினர்.

கருவறையின் முக்கிய கதவுகள் உட்பட 44 கதவுகள், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் பலரின் சன்னதிக்கான கதவுகள் ரமேஷின் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது. கருவறையில் யானை, பெண்கள், தாமரைகள், மயில் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் பொறிக்கப்பட்ட கதவுகள் இருக்கும். டெல்லி பொற்கொல்லர்கள் தற்போது 44 கதவுகளிலும்  தங்க முலாம் பூசு வருகின்றனர்.

Tags: tamilnadu carpenters44 doors ramar templesculptor-carpentersanctum sanctorumtamilnaduayodhyaRamar Templemamallapuram
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!

Next Post

அமெரிக்காவில் அதிகரிக்கும் QR குறியீடு மோசடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies