ரசிகர்களின் செயலால் ஜிகர்தண்டா படத்தைக் காணப்போகும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்!
Sep 9, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசிகர்களின் செயலால் ஜிகர்தண்டா படத்தைக் காணப்போகும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை காண ஆர்வமாக உள்ளதாக நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் தீபாவளி படமாக நவம்பர் 10 ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.70 கோடிவரை வசூலித்தது. தற்போது இத்திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Hi. Clint is aware of this Movie and he states he will get to it upon Completion of his New Film. Juror 2. Thank You. https://t.co/4UpiIOSzdj

— Clint Eastwood Official (@RealTheClint) December 13, 2023

இப்படத்தில் சீசரான ராகவா, பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனக்கு கொடுத்ததாக கூறி பழைய கேமரா ஒன்றை காட்டியிருப்பார். இதைக் கூறும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டே நடித்தது போல் விஎஃப்எக்ஸ் செய்திருந்தனர்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கைக் குறிப்பிட்டு, “இந்தியாவிலிருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற தமிழ் படத்தை எடுத்திருக்கிறோம். நெட்பிளிக்ஸில் இருக்கிறது. படம் முழுக்க உங்கள் பங்களிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அனிமேஷன் காட்சிகளில் உங்களின் இளம் வயதைக் காட்டியிருக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக இப்படத்தைப் பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.

Wowww….. Feeling So Surreal!!

The Legend #ClintEastwood is AWARE of #JigarthandaDoubleX & gonna watch it soon… 🙏🏼🙏🏼❤️

This film is my heartfelt dedication to @RealTheClint on behalf of Millions of his Fans in India…

Can't wait to hear what he thinks of the film once… https://t.co/nDF0Atr59g

— karthik subbaraj (@karthiksubbaraj) December 14, 2023

தற்போது, அந்த கணக்கிலிருந்து பதில் வந்துள்ளது. அதில், “ஹாய். கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பணிகள் முடிந்ததும் அந்தப் படத்தை (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) பார்ப்பார். நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ வாவ். நம்பமுடியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவான உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி ” என உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

Tags: Clint Eastwood to see Jigarthanda!actor karthik subbaraj
ShareTweetSendShare
Previous Post

ஒரே பாரதம், உன்னத பாரதம் – மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்

Next Post

கோலியும் இல்லை, பாபர் அசாமும் இல்லை ! பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீரர் யார் ?

Related News

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies