ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், காசியில் ஒன்றுபடுவோம் என மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், தமது X பக்கத்தில், காசி தமிழ் சங்கமம் 2.0 என்று தலைப்பிட்டு, “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், காசிக்கும் தமிழுக்குமான கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், காசியில் சங்கமிப்போம். தமிழ் கலாச்சாரத்திற்காக கரம் கோர்ப்போம்!
ஒன்று கூடுவோம் காசியில் தமிழர் கலாச்சாரத்தை மீண்டும் உரக்க சொல்வோம்.
கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கத்தின் மூலம் காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பல ஆண்டுகால உறவை இந்த உலகிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் மோடி மூலம் எடுத்துக்காட்டினோம்.
இந்த உறவை மேலும் வலுப்படுத்த இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
காசியில் ஒன்றுபடுவோம், தமிழ் மொழியால் தமிழ் கலாச்சாரத்தால் ஒன்றுபடுவோம்..! என குறிப்பிட்டுள்ளார்.
காசி தமிழ் சங்கமம் 2.0
“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், காசிக்கும் தமிழுக்குமான கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும்
காசியில் சங்கமிப்போம்.
தமிழ் கலாச்சாரத்திற்காக கரம் கோர்ப்போம்!ஒன்று கூடுவோம் காசியில் தமிழர் கலாச்சாரத்தை மீண்டும்… pic.twitter.com/QcW6pRG3Pj
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 14, 2023