கடந்த நான்கு ஆண்டுகளில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கியுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பண மோசடி குற்றத்தில் தொடர்புடைய 69 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, கடந்த 4 ஆண்டில் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இவற்றில் 16,637 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 2019 ஜனவரி 1 முதல் இன்று வரை நான்கு பேரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடிந்தது.
மேலும் மூன்று நபர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டன இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.