நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர் திடீரென புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய நபரான லலித் ஜா தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லி போலீசார் லலித் ஜாவை நேற்று இரவு கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்ற தாக்குதலுக்கு பின் லலித் ஜா ராஜஸ்தானில் உள்ள நாகௌருக்கு பேருந்தில் சென்றதாகவும், அங்கு அவர் தனது இரு நண்பர்களை சந்தித்து, இரவு விடுதியில் தங்கியது தெரியவந்தது. போலீசார் தன்னை தேடி வருவதை உணர்ந்த அவர், பேருந்தில் மீண்டும் டெல்லிக்கு வந்தாக போலீசார் தெரிவித்தனர்.