சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களது நினைவு தினம் இன்று.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“சிறந்த சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலிகள். அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் தேசத்தின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன.
Tributes to the great Sardar Vallabhbhai Patel on his Punya Tithi. His visionary leadership and unwavering commitment to the nation's unity laid the foundations of modern India. His exemplary work guides us towards building a stronger, more united country. We continue to draw…
— Narendra Modi (@narendramodi) December 15, 2023
அவரது முன்மாதிரியான பணி, வலுவான, ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்ப நம்மை வழிநடத்துகிறது.
அவரது வாழ்வில் இருந்து உத்வேகம் பெற்று, வளமான இந்தியா என்ற அவரது கனவை நனவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.