அரசு முறைப்பயணமாக முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தானுக்கு உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது.
3 நாள் அரசுமுறைப்பயணமாக ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வந்துள்ளார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி. முரளீதரன் வரவேற்றார்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஓமானின் மாட்சிமை மிக்க சுல்தான் ஹைதம் பின் தாரிக், அரசு முறைப்பயணமாக முதல் முறையாக டெல்லி வந்துள்ளார்.
அவருக்கு வெளியுறவுதுறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விஜயம் இந்தியா மற்றும் ஓமன் இடையே நீண்டகால நட்பு, ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.