ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலக்காடு சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பாலக்காட்டை சேர்ந்த சீனிவாசன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த கொலையில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் மற்றும் முஹம்மது யாசர் அராபத், அப்துல் ரஷீத் கே, அயூப் டிஏ, முஹம்மது மஞ்சூர், ஷாகுல் ஹமீது மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மதலி கேபி மற்றும் சஃபீக் பி. ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
அவர்களை பற்றி தகவல் தெரிந்தால், WhatsApp/DM +919497715294 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என என்ஐஏ கூறியுள்ளது.சீனிவாசன் கொலையில் தொடர்புடைய அடையாளம் தெரியாதவர்களின் சில படங்களையும் என்ஐஏ பகிர்ந்துள்ளது. இது தவிர, NIA குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது.
ஜூலை 4, 2010 அன்று கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த டி.ஜே.ஜோசப் என்ற கல்லூரிப் பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டிய நபருக்கான தகவலையும் அது கோரியுள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவமோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மற்றும் முக்கிய இந்து சமூகத் தலைவர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பான தகவலையும் என்ஐஏ கோரியுள்ளது.