ராணுவ வீரர்களின் தியாகங்கள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என பிரதம்ர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக (Vijay Diwas) கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பணிவுடன் சேவை செய்து, தீர்க்கமான வெற்றியை உறுதி செய்த அனைத்து துணிச்சலான மாவீரர்களுக்கும் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் தேசத்திற்கு மகத்தான பெருமையாக உள்ளது.
அவர்களின் தியாகங்களும், அசைக்க முடியாத மனப்பான்மையும் மக்களின் இதயங்களிலும் நமது தேசத்தின் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவர்களின் துணிச்சலை இந்தியா வணங்குகிறது. அவர்களின் அசைக்க முடியாத ஆன்மாவை நினைவுகூர்கிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.