தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்துள்ளது. இதன் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் இரு அணிகளும் கோப்பையைச் சமமாகக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை ஒரு நாள் போட்டி தொடங்கவுள்ளது. 21 ஆம் தேதி நிறைவடையும் ஒரு நாள் போட்டியைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.