வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது என்றும், வெள்ள நிவாரணம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் முதிர்ச்சியின்மையை தமிழகத்தில் முதன் முறையாக பார்க்கிறேன். பேரிடரின் போது மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசை குறை சொல்ல மாட்டார்கள்.
ஆய்வுக்கு வரும் மத்தியக்குழுவினர் தமிழக அரசை பாராட்டியது சம்பிரதாயமானது. மாநில அதிகாரிகள் அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்யவே அதிகாரிகள் வந்தனர்.
வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது. அரசின் தவறை தமிழக முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும். மத்திய அரசு கொடுத்த ரூ. 900 கோடியில் மத்தியரசின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. எனவே புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.