கேரள மாநிலம் புனலூர் பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஆண்டு தோறும் அச்சன் கோவிலுக்கு திருஆபரணங்கள் கொண்டு செல்லும் விழா நடைபெறும். இந்த ஆண்டு, புனலூர் பார்த்தசாரதி கோவிலில் இருந்து அச்சன் கோவிலுக்கு திரு ஆபரணங்கள் கொண்டு செல்லும் திருவிழா நடைபெற்றது.
அச்சன்கோவிலில் மார்கழி திருவிழா ஞாயிற்றுக்கிழமையான நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அச்சன் கோவில் ஐயப்பனுக்கு அறிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணங்கள் அடங்கிய பெட்டி புனலூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
கோட்டைவாசல், காலங்கரை, செங்கோட்டை, இலஞ்சி, தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், உள்ளிட்ட பகுதிகளில் திரு ஆபரணங்கள் அடங்கிய பெட்டிக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து திருஆபரண பெட்டி அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.