அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.
பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், பாரதத்தில் ஆன்மீகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால், பிரதமர் மோடியை, பாரதத்தில் உள்ள பல கோடி இந்து மக்களும், உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களும் மனதார வாழ்த்தும், பாராட்டும், ஆசியும் தெரிவித்து வருகின்றனர்.
உலக இந்து மக்களின் ஒரே கோரிக்கை அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வகையில் பாரதப் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் திறக்கப்பட உள்ளது.
ஆனந்த மகா உற்சவத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வந்து பகவானை வழிபட்டு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், பக்தர்கள் நலன் கருதி, அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.
முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ, பூனே, ஜம்மு – காஷ்மீர், மும்பை, சென்னை, பெங்களூர், ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தால், அதற்கு ஏற்ப இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. அத்துடன், அயோத்தியில் மக்கள் கூட்டத்தைக் கையாளும் அளவிற்கு அயோத்தி இரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 50,000 பேர் வந்து செல்லும் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இரயில் மூலம் அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
இதனால், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.