அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!
Sep 14, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

இராமர் கோபில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், பாரதத்தில் ஆன்மீகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால், பிரதமர் மோடியை, பாரதத்தில் உள்ள பல கோடி இந்து மக்களும்,  உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களும் மனதார வாழ்த்தும், பாராட்டும், ஆசியும் தெரிவித்து வருகின்றனர்.

உலக இந்து மக்களின் ஒரே கோரிக்கை அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வகையில் பாரதப் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் திறக்கப்பட உள்ளது.

ஆனந்த மகா உற்சவத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வந்து பகவானை வழிபட்டு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், பக்தர்கள் நலன் கருதி, அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ, பூனே, ஜம்மு – காஷ்மீர், மும்பை, சென்னை, பெங்களூர், ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தால், அதற்கு ஏற்ப இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. அத்துடன், அயோத்தியில் மக்கள் கூட்டத்தைக் கையாளும் அளவிற்கு அயோத்தி இரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 50,000 பேர் வந்து செல்லும் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இரயில் மூலம் அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதனால், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags: ayodhyaRamar Templeindian railwaysthousand railtrain service
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி மஹா உற்சவம் : புதிய அறிவிப்பு!

Next Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies