உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையோ உணவகத்திற்குள் லாரி புகுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இடாவாஹ்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உணவகம் அமைந்துள்ளது. அங்கு நேற்று இரவு வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இரவு 10,30 மணி அளவில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் உணவக உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.