ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
வங்கதேச அணியின் வீரர்கள் :
அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி ( கேப்டன் ), ஜிஷான் ஆலம், சௌதூர் எம்டி ரிஸ்வான், ஆதில் பின் சித்திக், அரிஃபுல் இஸ்லாம், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், அஹ்ரார் அமீன், பர்வேஸ் ரஹ்மான் ஜிபோன், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி, எம்டி ரஃபி உஸ்ஸாமான் ரஃபி, ரோஹனத் டவுல்லா போர்சன்.
ஐக்கிய அரபு அமீரகம் அணி :
ஆர்யன்ஷ் சர்மா ( கேப்டன் ), ஷ்ரே சேத்தி, துருவ் பராசரர், ஈதன் டிசோசா, அயன் அப்சல் கான், தனிஷ் சூரி, அம்மார் பாதாமி, மரூஃப் வியாபாரி, ஓமித் ரஹ்மான், அக்ஷத் ராய், ஹர்திக் பாய், அய்மன் அகமது.