திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை செஞ்சி தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோழர் காலத்தில் சிங்கபுரி கோட்டம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் செஞ்சி என்றாகியது. வரலாற்று சிறப்பு மிக்க, 830 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, இன்று வரை, முழுமையான வடிவத்துடன் மிச்சமிருக்கும் ஒரே தமிழ் மன்னர்களின் கோட்டையாகும்.
60 அடி அகல கோட்டைச்சுவர், அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதைத் தாண்டி மலையும் காடுகளும் என இயற்கை அரண்கள் சூழ்ந்த செஞ்சிக்கோட்டை, இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் செஞ்சி மஸ்தான், மற்றொருவர் பொன்முடி, இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒருவர் சாராயம் காய்ச்சுபவர் நலத்துறை அமைச்சர், மற்றொருவர் செம்மண் கடத்தல்துறை அமைச்சர்.
இப்படி அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் தான் இந்தப் பகுதியில் எல்லா அரசு ஒப்பந்தங்களையும் முடிவு செய்கிறார் என்றும், திண்டிவனம் நகராட்சி திமுக வார்டு உறுப்பினர்களே குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
மற்றொரு அமைச்சர் பொன்முடி மீது சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் எடுக்க உரிமம் வழங்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது.
பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில், முறைகேடாக உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் உட்பட பல கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் நிறுவனங்களை வாங்கியதில், ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். செஞ்சி தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, தொழிற்பயிற்சி நிலையங்கள், செஞ்சி கோட்டை தேசிய மற்றும் பன்னாட்டு சுற்றுலா மையமாகத் தரம் உயர்த்தல், நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுச் செஞ்சி, விக்கிரவாண்டி, மானூர், விழுப்புரம், கீழ்பென்னாத்தூர் ஆகிய ஊர்களில் பாசன வசதி, செஞ்சி அனந்தபுரத்தில் அரசுப் பேருந்து பணிமனை, செஞ்சி பகுதியில் மூலிகைப் பண்ணை, செஞ்சி பகுதியில் விவசாயிகளின் விதைப் பண்ணை, செஞ்சி திருவரங்கநாதர் ஆலயத்திற்குச் செல்ல மலைப்பகுதியில் சாலை, செஞ்சி பேரூராட்சியில் சலவைத் தொழிலாளிகளுக்கு சலவைத் துறை, செஞ்சி மேல் களவாய் சங்கராபரணி ஆற்றில் தரைப் பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைத்தல், செஞ்சியில் அரசு வேளாண் கல்லூரி, மேல் மலையனூரில் பயிலும் மலைவாழ் இன மாணவர்கள் தங்குவதற்கு விடுதி வசதி, மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் பேருந்து நிலையம், என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
ஆனால் மேடைக்கு மேடை பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, செஞ்சி மக்களின் நெடுநாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
சமீபத்தில் சென்னை வெள்ளத்துக்கு முன்பாக 98 சதவீதம் பணிகள் நிறைவேற்றிவிட்டோம் என்று கூறிவிட்டு, வெள்ளம் வந்தபின் 42 சதவீதம் பணிகள் தான் நிறைவேற்றினோம் என்று மாற்றிப் பேசுகிறது திமுக அரசு. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். திமுகவினர் சொல்வதை நம்பக்கூடாது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்களை ஏமாற்றும் திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர்
நரேந்திர நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.