இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்துள்ளது. இதன் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் கோப்பை சமமாகக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள வேர்ல்ட் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.
அதேபோல் தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் விளையாடி உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 51% இந்தியா வெற்றி பெரும் என்றும் 49% தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.