லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Sep 9, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் படகு விபத்து: 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லிபியா கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

படகு விபத்துகள் அதிகமாக நடக்கும் நாடாக லிபியா விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, இஸ்லாமிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக  படகுகளில் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

குறிப்பாக, எத்தியோப்பியா, எரித்திரியா, நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்தாலி வழியாக கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைவதற்கு லிபியா மற்றும் துனிசியா ஆகியவைதான் புறப்படும் முக்கியப் பகுதிகளாக இருக்கின்றன.

ஆனால், மோசமான படகுகள், அதிக அளவிலான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வானிலை காரணமாக படகுகள் கடலில் மூழ்கி விடுகின்றன. அந்த வகையில், லிபியா கடல் பகுதியில் நடந்த படகு விபத்துகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த படகு விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதுதான் மிகப்பெரிய படகு விபத்தாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து 86 புலம்பெயர் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவை நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. இப்படக்கில் காம்பியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்தப் படகு பாரம் தாங்காமல் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த லிபியா கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இதில், 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அந்நாட்டின் தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேசமயம், மீதமுள்ள 61 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இவர்களது உடல்களும் கரை ஒதுங்கவில்லை. எனினும், மேற்கண்ட 61 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Tags: accidentboatLibia
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Next Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies