மும்பை அணி நிர்வாக பள்ளி நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் கலந்துகொண்டார். அவருக்கு மும்பை அணி நிர்வாகம் மீது கோபம் இல்லை என்றும், அவரின் குழைந்தைக்காக தான் பள்ளிக்கு சென்றிருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் வரும் 19 ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாகவே மும்பை அணியின் 10 வருட கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கம் செய்து ஹர்திக் பாண்டியவை கேப்டனாக நியமித்துள்ளது மும்மை அணியின் நிர்வாகம்.
இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மும்பை அணியின் சமூக வலைதள பக்கத்தையும் பின்தொடர்வதை நிறுத்தி வருகின்றனர். மும்பை அணியின் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டகிராம் பக்கத்தை 10 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தினர்.
இந்நிலையில் ரோஹித் சர்மாவும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இதனால் ரோகித் சர்மா கோபமாக இருப்பதாகவும் அவர் வேறு அணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது.
மேலும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, ரோஹித்துக்காக சென்னை அணி பதிவிட்ட காணொளியை லைக் செய்தார். ஆனால் மும்பை அணி பதிவிட்ட புகைப்படத்தை லைக் செய்யவில்லை.
இந்நிலையில் ரோகித் சர்மாவை சரி ஆக்கும் முயற்சியில் அம்பானி குடும்பம் ஈடுபட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடத்தும் பள்ளி ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா அவருடைய மனைவி ரித்திகா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் மும்பை அணிக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அம்பானி குடும்பம் இந்த காயை நகர்த்தியிருக்கிறது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து, மும்பை அணி மீது ரோகித் சர்மாவுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்க மாட்டார் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா ரசிகர்கள், மும்பை செய்தது மன்னிக்க முடியாத செயல் என்றும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவின் குழந்தை பங்கேற்றதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் இல்லையெனில் தன்னுடைய கோபத்தை காட்டும் விதமாக புறக்கணித்து இருப்பார் என்றும் கூறுகின்றனர்.