'பிங்க்' நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் - காரணம் என்ன?
Oct 27, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிங்க்’ நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 03:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தங்களின் பச்சை நிற ஜெர்சியை அணிந்துக் கொண்டு ஆடாமல் மாறாக பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தென் ஆப்பிரிக்கா அணி மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த  “பிங்க் மேட்ச்” என்ற பெயரில் ஒரு போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்தப் “பிங்க் மேட்ச்” போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பிங்க் நிற ஆடை அணிந்து பங்கேற்பார்கள். இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளது.

இந்த பிங்க் நிற போட்டியில் கிடைக்கும் வருவாய் முழுவதும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.

இது பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவர் போலேட்ஸி மொசெகி கூறுகையில், “கிரிக்கெட் ரசிகர்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவ, விழிப்புணர்வு மட்டும் போதாது. செயல்திறன் மற்றும் பரிசோதனைக்கு மக்களை ஊக்குவிக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில்  பெண்களிடையே அதிகமாக இருக்கும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தான். ஆனால் இது ஆண்களையும் பாதிக்கலாம் என்று கூறினார். முன்கூட்டியே கண்டறிதல், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: CricketIndiasouth africapink colourcancercancer awareness
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Next Post

மும்பை அணி நிர்வாகம் மீது கோபமா?

Related News

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies