சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் புதிய இந்தியாவின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டிடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, சூரத் வைரத் தொழில்துறை 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருவதாகவும், புதிய வர்த்தகத்தின் மூலம் மேலும் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.
சூரத்தின் பெருமைக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது. வைரமானது சிறியதல்ல, ஆனால் உலகின் மிகச் சிறந்தது. உலகின் மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இந்த வைரத்தின் பளபளப்புக்கு முன் வெளிர் நிறமாகின்றன என்று அவர் கூறினார்.
உலகில் வைர வியாபாரத்தைப் பற்றி ஒருவர் பேசும் போதெல்லாம், சூரத் மற்றும் இந்தியா குறிப்பிடப்படும் என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
சூரத் டயமண்ட் போர்ஸ் இந்திய வடிவமைப்பாளர்களின் திறனைக் காட்டுகிறது. இந்த கட்டிடம் புதிய இந்தியாவின் புதிய வலிமை மற்றும் உறுதியின் சின்னம் என்றும் அவர் கூறினார். சூரத் விமான நிலையம் சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகவும் மோடி கூறினார்.