குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி காயங்களுடன் காவல் நிலையத்தில் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் புகார் அளித்துள்ளார்.
கிரைம் டிராமா ஷோவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி தன்ராஜ். அதை தவிர தேரே இஷ்க் மே கயல் மற்றும் பெப்பன்னா போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் தனது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப உறுப்பினரால் அவர் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் “ஹலோ நான் வைஷ்ணவி தன்ராஜ். எனக்கு இப்போது உதவி தேவை. நான் தற்போது காஷிமிரா, காவல் நிலையத்தில் உள்ளேன், எனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் நான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டுள்ளேன். தயவுசெய்து எனக்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை. ஊடகங்கள், செய்தி சேனல்கள் மற்றும் தொழில்துறையினர் அனைவரும் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவி வெளியிட்டு இருந்த வீடியோவில் முகம், உதடு, வலது கை மற்றும் மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன அந்த காயங்களை காட்டித்தான் அவர் உதவி கேட்டுள்ளார். வைஷ்ணவியின் புகாரை பெற்றுக்கொண்ட காஷிமிரா காவல் நிலைய அதிகாரி, அவருடைய தாய் மற்றும் சகோதரனையும் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.