140 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா (விக்சித்) வளர்ச்சியடைந்தது விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் மற்றும் சிரமமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டினார். மக்கள் நலத்திட்டங்கள் பின்தங்கிய மக்களைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தையும் மோடி வலியுறுத்தினார்.
அரசின் திட்டங்கள் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக பிரதமர் கூறினார். ஏழைப் பிரிவினர் அதிகாரம் பெற்றவர்களாக உணர்கிறார்கள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை குறைப்பது மிகுந்த திருப்தியைத் தருவதாக அவர் கூறினார்.
140 கோடி நாட்டு மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா ‘விக்சித்’ (வளர்ச்சியடைந்தது) ஆகிவிடும்” என்றார். சுதந்திரப் போராட்டத்தின் போது இருந்த சுதந்திரக் காய்ச்சலைப் போல, வளர்ச்சிக்கான “உணர்வை” மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.