ஆர்எஸ்எஸ் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு இன்று முதல் உணவு வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்த பேரழிவு பல குடும்பங்களை வீடு அற்றவர்களாக மாற்றியுள்ளது. பலரின் வாழ்வாதாரங்களை அழித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர் எஸ் எஸ் உதவிகளை அளித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆர் எஸ் எஸ் சார்பில் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நகருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 பேருக்கு இன்றிலிருந்து உணவு வழங்கப்படுகிறது.