டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 18, 2023, 07:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பி இருக்கிறது.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு கடந்த 2021-2022 காலக்கட்டத்தில் புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. அதன்படி, தனியார் மதுபான விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, டெல்லி துணை நிலை ஆளுநர், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. மேலும், சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மன் தெளிவற்றதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு இருந்ததாகவும் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார்.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில், டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும், அவர் பெயர் குறிப்பிடப்படாதக இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 19-ம் தேதி செல்கிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: ED summonsArvind Kejriwaldelhi cm
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவி!

Next Post

மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் 45 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies