கங்கைக்கரையில் நமோ படித்துறையில் நடந்த இந்த விழாவின்போது வேத பாராயணமும் தமிழ் இசையும் வித்துவான்களால் ஒலிக்கப்பட்டது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
காசி தமிழ் சங்கமம் என்னும் அருமையான நிகழ்வு இரண்டாவது ஆண்டாக 17-12-2023 முதல் 30-12-2023 வரை நடந்துவருகிறது! பாரத பிரதமர் நரேந்திரமோடி இதனை முன்னின்று நடத்துகிறார்கள்!
தனது 16 வயதுமுதல் 21 வயதுவரை காசி நகரத்தில் கல்வி பயின்று உலக ஞானம் பெற்ற சுப்பிரமணிய பாரதியால் பெரிதும் கவரப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், “காசி நகர்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்னும் பாரதியார் பாடல் வரிகளை, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஆதார இசையாக கொண்டுள்ளார்! காசிதமிழ் சங்கமத்தின் முதலாம் ஆண்டு உரையிலும் இரண்டாம் ஆண்டு உரையிலும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இந்த பாரதியின் பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசினார்!
இரண்டாம் ஆண்டு உரையின்போது அப்படி ஒரு கருவியையும் நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்! ஆம் 18 இந்திய மொழிகளின் மொழி பெயர்ப்பு கருவி அது! அதனை காதில் பொருத்திக்கொண்டால் பேசுகிறவர் எந்த மொழியில் பேசினாலும் நாம் விரும்பும் மொழியில் கேட்க முடியும்! இந்த கருவியை காதோடு பொருத்திக்கொண்டிருந்த தமிழக தமிழர்கள் அதாவது காஞ்சி மாநிலத்தவர்கள் காசியில் பிரதமர் நரேந்திரமோடியால் பேசப்பட்ட காசி மொழியான ஹிந்தி மொழியை தமிழில் கேட்டனர்! ” அண்ணாமலை எப்படி சரியாக கேட்கிறதா? எல்லோருக்கும் கேட்கிறதா? இந்த காதுகளுக்கான டெக்னாலஜியை இப்போதுதான் நாம் அறிமுகம் செய்துள்ளோம், எனவே சோதனையாக கேட்கிறேன், சரியாக கேட்கிறதா?” என்று மேடையில் இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடமும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களிடமும் கேட்டார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்! எல்லோரும் உற்சாகத்துடன் ”தமிழில் கேட்கிறது” என ஆரவாரமாக பதிலளித்தார்கள்! பாரதியின் கனவை நனவாக்கினார் பிரதமர் நரேந்திரமோடி!
கங்கைக்கரையில் நமோ படித்துறையில் நடந்த இந்த விழாவின்போது வேத பாராயணமும் தமிழ் இசையும் வித்துவான்களால் ஒலிக்கப்பட்டது! டெல்லிக்கும் காசிக்கும் இடையிலானா வந்தே பாரத் ரயிலும், கன்னியாக்குமரிக்கும் பனாரஸ்சுக்கும் இடையிலான ”காசி தமிழ் சங்கமம்” என்னும் பெயர் கொண்ட புதிய ரயில் தடமும் காணொலி மூலமாக துவக்கப்பட்டது!
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவதென்பது சிவபெருமானின் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு வருவது போன்றது, என்று குறிப்பிட்டார்!, ”நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி”- என்னும் தமிழ் பழமொழியை தனது உரையில் நினைவு கூர்ந்தார் பிரதமர்!
பகீரதனின் தவம் காரணமாக பிரம்ம லோகத்தில் இருந்து இமய மலையில் இருக்கும் சிவபெருமானின் தலையை அடைந்து, அங்கிருந்து பாய்ந்தோடி பாரத தேசத்தவர்களின் பாவங்களை கழுவி வளங்களை வழங்குகிறது கங்கை!
சரஸ்வதி நதி மண்ணுக்கடியில் பாய்வதைப்போல கங்கை இந்திய தேசம் முழுமையுமே மண்ணுக்கடியில் பரவலாக பாய்ந்துக் கொண்டிருக்கிறாள்! எனவேதான் ”நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி” என்னும் பழமொழி தமிழில் உள்ளது! இந்த மரபின் தொடர்ச்சிதான் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் காசிதமிழ் சங்கமம் நிகழ்ச்சி!
காசி என்பது கங்கைக்கரை நகரம்! அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் தமிழ் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது! இமயமலை சென்று கங்கையில் மூழ்கி சிவலிங்கத்தை எடுத்துவந்து கோயில் அமைப்பது என்பது தமிழ் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மரபாக இருந்தது!
சேரன் செங்குட்டுவன் கூட 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கண்ணகிக்கு சிலை அமைக்க இமயம் சென்றுதான் கல் எடுத்து வந்தான் என வரலாறு கூறுகிறது! சிவனுக்கு கோயில் கட்டுவதற்காக பராக்கிரம பாண்டியன் என்னும் தமிழ் மாமன்னன் கங்கையிலிருந்து சிவலிங்கத்தை எடுத்துவரும் வேளையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த வண்டியை நகர்த்த முடியவில்லை, எவ்வளவோ முயன்றும் முடியவில்லை! எனவே, அந்த இடத்திலேயே சிவனை பிரதிஸ்டை செய்து கட்டிய கோயில்தான் காசி விஸ்வநாதர் ஆலயமாகும், என்பது வரலாற்று குறிப்பு! இந்த வரலாற்று குறிப்பினையும் பிரதமர் நரேந்திரமோடி தமது காசி தமிழ் சங்கம உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்கள்!
ஏறத்தாள 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிசங்கரரும், 1000 ஆண்டுகளுக்கு முன்பேகூட பல தமிழ் மன்னர்களும், 300 ஆண்டுகளுக்கு முன் குமர குருபரரும் கடைசியாக பாரதியாரும் பன்பாட்டில் கலந்த பூமிதான் காசி நகரம்! காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இன்றும் தமிழர்களின் பூஜைதான் நடக்கிறது! தமிழ் மன்னன் பிரதிஸ்டை செய்த காசி விஸ்வநாதர் சிவலிங்கமும் கோயிலும், குமர குருபரர் நிறுவிய திருமடமும், பாரதியாரின் இல்லமும், தமிழர்களின் நகரத்தார் மடமும் இன்றளவும் தமிழ் காசி இணைப்பு வரலாற்று அடையாளங்களாக உள்ளன!
பாரதியார் காசியில் பயின்ற வேளையில்தான், பல உலக மொழிகளை கற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது! புனித கங்கை மற்றும் விஸ்வநாதர் ஆலய தரிசனங்கள் கிடைப்பதால் உலகின் பல மொழி பேசும் மக்களும் அங்கே கூடுகின்றனர்! எனவேதான் பாரதியாரால் பல மொழிகளை கற்கமுடிந்தது! அந்த பல்வேறு மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியும் இன்றளவும் இருக்கிறது! !
”ஒன்றியம்” என்னும் சொல்லை பயன்படுத்தி, தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க சிலர் முயற்சிப்பதை நாம் முறியடிக்க வேண்டும்”, என நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் சொல்லியுள்ளதை நாம் கருத்தில் கொள்ளவேண்டிய காலமாக இது உள்ளது! ”இந்த தேசம் ஒருங்கிணைந்தது அல்ல! ஒன்றாக இருந்தது! ஒன்றாக இருப்பது” என்னும் உண்மை வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்!
ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் கலந்துக்கொண்ட இரண்டாம் ஆண்டு காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியை கோடிக்கணக்கான இந்திய மக்களும் உலக சமுதாயமும் காணொலி மூலம் கண்டு களித்துள்ளது!
இந்திய கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்துவதாக அமைந்தது! இமயம் முதல் குமரிவரை தேசம் ஒன்று, கல்தோன்றி மண் தோன்றா காலம் முதல் இன்றுவரை ஒன்றேதான் நமது உயர்ந்த கலாச்சாரம்! என்னும் உண்மையை நாம் நமது வாரிசுகளுக்கும் மாணவர்களுக்கும் சொல்லித்தரவேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.